நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி திறந்து வைத்தார்!
மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 16 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்டப்பட்டது.;
நாமக்கல் மாநகராட்சி 17 வது வார்டு ஏ.எஸ்.பேட்டை பகுதியில் புதிய அங்கன்வாடி மையத்தை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார் எம்பி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 16 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அந்த மையத்தை இராஜேஸ்குமார் எம்பி ரிப்பன் வெட்டி கல்வெட்டு திறப்பு விழா செய்து பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து குழந்தைகள் பொதுமக்கள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்வில் மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணை மேயர் செ.பூபதி, திமுக நகர செயலாளர்கள் அ.சிவக்குமார், ராணா ஆனந்த், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார்,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளம்பரிதி, உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள்,வார்டு கழக செயலாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.