சாம்பவர்வடகரையில் உயர் கோபுர மின் விளக்குகள் துவக்க விழா
சாம்பவர்வடகரையில் உயர் கோபுர மின் விளக்குகள் துவக்க விழா;
சாம்பவர்வடகரையில் 9.90 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மூன்று உயர் கோபுர மின் விளக்குகளை மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்பி ஆகியோர் திறந்து வைத்தனர். சாம்பவர்வடகரை பேரூர் செயலாளர் முத்து கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக மருதவாணி அம்மன் கோவில், மாதாங் கோவில்,15 வந்து வார்டு பள்ளி வாசல் அருகில் தலா மூன்று லட்சத்து முப்பதாயிரம் மதிப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்பி நிதி ஒதுக்கீடு செய்தார். பணிகள் முடிந்து திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பேரூர் செயலாளர் முத்து தலைமை தாங்கினார். பேரூராட்சித் தலைவர் சீதாலட்சுமி முத்து, பேரூராட்சி செயல் அலுவலர் விமலா ஸ்டெல்லா பாய், துணைத் தலைவர் நாலாயிரம் என்ற பாப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்பி ஆகியோர் பங்கேற்று உயர் கோபுர மின் விளக்குகளை இயக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சுடலைமுத்து, ரபீக்ராஜா, விஜயலட்சுமி,மாவட்ட பிரதிநிதிகள் சண்முகவேல், விஜயகுமார், முன்னாள் பேரூர் செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய பிரதிநிதிகள் சந்திரன்,செல்வின்அப்பாதுரை, ஆறுமுகம்,பட்டுமுத்து, முத்துக்குமார் திமுக நிர்வாகிகள் ராமகிருஷ்ணன்,சங்கர் ராமன், நேதாஜி ,அண்ணாமலை,பக்ருதீன்,செய்யது அபு,காதர் மைதீன்,சாமி தேவர், பிரகாஷ்,ஜமாத் நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.