தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் முன்னேறி விடலாம். மாணவர்களிடையே நடிகை குஷ்பூ பேச்சு.
எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏசி சண்முகம் பேசுகையில் விரைவி 500 படுக்கைகள் கொண்டது 4 ஆபரேஷன் தியேட்டர் கொண்ட மருத்துவமனைகள் கட்டப்பட்டு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்;
ஆரணி, தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்று ஆரணி எம்ஜிஆர் நகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆண்டு விழா நடைபெற்றதில் திரைப்பட நடிகை குஷ்பூ பேசினார். ஆரணி எம்ஜிஆர் பல்கலைக்கழக வளாகத்தில் ஆண்டு விழா நடைபெற்றதில் ஆரணி ஏ.சி.எஸ் கல்வி குழும நிர்வாக தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார் தலைமை தாங்கினார். அனைவரையும் எம்ஜிஆர் பல்கலைக்கழக புலமுதன்மையர் பி.ஸ்டாலின் வரவேற்றார். கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் லலிதாலட்சுமி சண்முகம், பென்ஸ் கிட்ஸ் மற்றும் பென்ஸ் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் நிர்மலா அருண்குமார், ஏ.சி.எஸ். கல்வி குழும கல்லூரி செயலாளர் ஏ.சி.ரவி, இணை பதிவாளர்கள் பெருவழுதி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக எம்ஜிஆர் நிகர் நிலை பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம், திரைப்பட நடிகை குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டு டாக்டர் எம்ஜிஆர் பாலிடெக்னிக் கல்லூரி, டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக்கல்லூரி, பாலாஜி கல்வியியல் கல்லூரி, எஸ்.பி.சி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். பின்னர் திரைப்பட நடிகை குஷ்பு பேசியது, எல்லா செல்வங்களும் வந்து போகும் ஆனால் கல்வி என்கிற செல்வம் எப்போதும் அழியாது. வாழ்க்கையில் முன்னேற கல்வி மட்டும் போதாது கல்வியோடு திறமைக்கும் அப்பாற்பட்டு தன்னம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். மேலும் பெற்றோர்களே உங்கள் ஆசைகளை, கனவுகளை குழந்தைகளிடம் திணிக்காதீர்கள். அவர்களுடைய ஆசைகள் என்ன என்று ஆராய்ந்து அதன்படி செயல்படுங்கள். மாணவர்களாகிய நீங்கள் உங்கள் கனவுகளை நோக்கி செல்லுங்கள். இந்த ஆரணி ஏ.சி.எஸ் குழுமக்கல்லூரிகளில் அனைத்து பிரிவுகள் படிப்புகள் உள்ளது.என்று பேசினார். பின்னர் எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் பேசியது ஆரணியில் நான் கல்லூரி பயிலும் போது இங்கு கலைக் கல்லூரி இல்லாததால் செய்யார் சென்று பயின்று வந்தேன் பின்னர் சென்னைக்குச் சென்று பயின்றேன் நான் சிரமப்பட்டு படித்தேன் தற்போது ஆரணி பகுதி மக்கள் யாரும் சிரமப்படக்கூடாது என ஆரணி பகுதியில் அனைத்து கல்லூரிகளையும் ஆரம்பித்துள்ளேன். மேலும் ஆரணி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விரைவி 500 படுக்கைகள் கொண்டது 4 ஆபரேஷன் தியேட்டர் கொண்ட மருத்துவமனைகள் கட்டப்பட்டு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று பேசினார். மேலும் இதில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்இராமச்சந்திரன், போளூர் முன்னாள் எம்எல்ஏ எல்.ஜெயசுதா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதில் தனிஅலுவலர் கார்த்திகேயன், துணை முதன்மையர் புவனா, பிஸியோதெரபி துறைத்தலைவர் சுதாகர், ஏ.சி.எஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டி.இளங்கோ, கலைக்கல்லூரி முதல்வர் கந்தசாமி, பாலாஜி கல்வியியல் கல்லூரிமுதல்வர் பிரபு, பொறியியல் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, கண்ணம்மாள் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் அருளாளன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.