வாலாஜா அடுத்த மேல்புதுப்பேட்டையில் ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேக விழா
இராணிப்பேட்டை பிப்.02- வாலாஜா அடுத்த மேல்புதுப்பேட்டை கிராமத்தில் அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், கோபூஜை, நவகிரக ஹோமம், லக்ஷ்மி ஹோமம், 108 மூலிகை ஹோமம், ஸ்வாமிகளுக்கு காப்பு கட்டுதல்;
இராணிப்பேட்டை பிப்.02- வாலாஜா அடுத்த மேல்புதுப்பேட்டை கிராமத்தில் அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், கோபூஜை, நவகிரக ஹோமம், லக்ஷ்மி ஹோமம், 108 மூலிகை ஹோமம், ஸ்வாமிகளுக்கு காப்பு கட்டுதல் மற்றும் பல்வேறு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசை வாத்தியங்களுடன் விமானத்திற்கும், மூலவர் சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீப ஆராதனையுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவை ஸ்ரீ ராஜு சிவம் குருஜி தலைமையேற்று நடத்தினார் மேலும் கோவில் உரிமையாளர் தொழிலதிபர் ஜெ. சிவகுமார், திருமதி சி. கௌரி அனைவரையும் வரவேற்றனர் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார், மாவட்ட துணை தலைவர் வேதகிரி, வாலாஜா நகர கழக செயலாளர் டபிள்யூ. ஜி. மோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் ஊர் நாட்டாமைதாரர்கள் பக்தகோடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது