அதிக விலைக்கு மது விற்ற நபர் கைது
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.;
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்பதாக தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். ராஜம் தியேட்டர் அருகே பேட்டரி டூவீலரில், ஒரு நபர் அதிக விலைக்கு மது விற்றுக்கொண்டு இருந்தார். இவரை கைது செய்த போலீசார், இவரிடமிருந்து, 21`ஆயிரத்து, 160 ரூபாய் மதிப்பிலான 144 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் விசாரணையில் இவர் பெயர் பிரபு, 40, என்பதும், கத்தேரி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது./ இவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.