ஆரணியில் திமுக , அதிமுகவினர் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு.
ஆரணியில் திமுக, அதிமுக கட்சியினர் அண்ணா நினைவு தினம் முன்னிட்டு அமைதி ஊர்வலமாக சென்று அவரது சிலைக்ககு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்;
ஆரணியில் திமுக, அதிமுக கட்சியினர் அண்ணா நினைவு தினம் முன்னிட்டு அமைதி ஊர்வலமாக சென்று அவரது சிலைக்ககு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக. ஆரணியில் அண்ணா நினைவு தினம் முன்னிட்டு திமுக சார்பில் கட்சியினர் அண்ணாசிலை அருகிலிருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு காந்திரோடு, பழைய பஸ்நிலையம், பெரிகடைவீதி, மண்டிவீதி வழியாக சென்று மீண்டும் அண்ணாசிலைக்கு வந்தடைந்தனர். பின்னர் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் அண்ணாசிலைக்கு மாலை ்அணிவித்தார். இதில் ஆரணி நகர பொறுப்பாளர் சைதை வ.மணிமாறன் தலைமை தாங்கினார். நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் எஸ.எஸ்.அன்பழகன், சுந்தர், மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் ஒன்றியதுணைத்தலைவர் கே.டி.ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியகவுன்சிலர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதிமுக. ஆரணியில் அண்ணா நினைவு தினம் முன்னிட்டு அதிமுக சார்பில் மாவட்ட அவைத்தலைவர் அ.கோவிந்தராஜன் தலைமையில் பழைய பஸ்நிலையம் எம்ஜிஆர் சிலை அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆரணி அண்ணாசிலை வரை சென்றனர். பின்னர் அண்ணாசிலைக்கு முன்னாள் அமைச்சரும், ஆரணி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நகரசெயலாலர் அ.அசோக்குமார், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் பாரி பி.பாபு, ஒன்றியசெயலாளர்கள் ஜி.வி.கஜேந்திரன், வழக்கறிஞர் க.சங்கர்,ஜெயப்பிரகாஷ், திருமால், எம்ஜிஆர் இளைஞரணி மாவட்டசெயலாளர் ஏ.ஜி.ஆனந்தன், மாவட்டதுணைசெயலாளர் சேவூர் ஜெ.சம்பத், ஜெ பேரவை மாவட்டதுணை தலைவர் டி.கருணாகரன், கலைப்பிரிவு மாவட்டசெயலாளர் ஜி.வெங்கடேசன், நெசவாளர் அணி மாவட்டசெயலாளர் சுந்தரமூர்த்தி, அதிமுக நகரமன்ற உறுப்பினர்கள் சதீஷ், பாரதிராஜா, விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆரணி சட்டமன்ற அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின்57 வது நினைவு நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், ஆரணி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அலங்கரிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்வில்,ஆரணி நகர கழக செயலாளர் ஏ.அசோக்குமார், ஆரணி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் இ.ஜெயபிரகாஷ், ஐ.டி விங் மண்டல பொருளாளர் எஸ்.பி.சரவணன், மாவட்ட மகளிர் அணி ஜெ.கலைவாணி, ஒன்றிய நிர்வாகிகள் பீமன் ரவி, ரத்தினகுமார், ஏசுராஜ், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர வட்ட கிளைக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.