பாளையங்கோட்டையில் விழிப்புணர்வு நடைபயணம் நிகழ்ச்சி
விழிப்புணர்வு நடைபயணம் நிகழ்ச்சி;
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமையில் கிரினத்தான் 2026 என்ற இயற்கை மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நடை பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சுகுமார் கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் சேவியர் கல்வி குழுமத்தின் அதிபர் அருட்பணி முனைவர் இன்னாசி முத்து, செயலர் அருட்பணி லாசர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.