ஆரணியில் சாரண, சாரணிய ஆசிரியர்களுக்கான குருளையர் அடிப்படை பயிற்சி முகாம்.
ஆரணி சிஎஸ்ஐ பள்ளியில் கிழக்கு ஆரணி, மேற்கு ஆரணி,தெள்ளாறு மற்றும் பெரணமல்லூர் ஒன்றியங்களைச் சார்ந்த அரசு, அரசு நிதி உதவி, மெட்ரிக் சி.பிஎஸ்.சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சாரண, சாரணியர், குருளையர் அடிப்படை பயிற்சி முகாம் நடைபெற்றதில் தலந்துகொண்ட சாரண, சாரணிய ஆசிரியர்கள்.;
ஆரணி சிஎஸ்ஐ பள்ளியில் கிழக்கு ஆரணி, மேற்கு ஆரணி,தெள்ளாறு மற்றும் பெரணமல்லூர் ஒன்றியங்களைச் சார்ந்த அரசு, அரசு நிதி உதவி, மெட்ரிக் சி.பிஎஸ்.சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சாரண, சாரணியர், குருளையர் அடிப்படை பயிற்சி முகாம் நடைபெற்றது. சாரண படைப்பிரிவில் 31 ஆசிரியர்களும், சாரணியர் படைப்பிரிவில் 22 ஆசிரியர்களும் மற்றும் குருளையர் படைப்பிரிவில் 14 ஆசிரியர்களும் பயிற்சி பெற்றனர். பயிற்சியின் துவக்க விழாவில் சிஎஸ்ஐ பள்ளியின் தாளாளர் தியாகராஜன் மற்றும் தலைமை ஆசிரியர் ரோஸ்லின் ஞானமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இரண்டாம் நாள் பயிற்சி முகாமில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனிராஜ், செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலர் செந்தில் முருகன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்துவதில் சாரண இயக்கத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. எனவே ஆசிரியர்கள் இச்சாரணப் பயிற்சியினை சிறப்பாக பெற்று மாணவர்களை நல்வழிப்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பயிற்சியின் இறுதி நாள் விழா செவ்வாய்கிழமை நடைபெற்றதில் பெரணமல்லூர் ரோட்டரி சங்க நிர்வாகி டூன்போஸ்கோ, ஆரணி சாரண மாவட்ட செயலாளரும் கேசவன், மாநில சாரண, சாரணிய, குருளையர் பயிற்சி ஆணையர்கள் லோகநாதன், லட்சுமி, தவசி மணி,பிரியா, கீர்த்தி மணி ஆகியோர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர். மாவட்ட பொருளாளர் மாலவன், சாரண ஆணையர் ரவிச்சந்திரன், சாரணிய ஆணையர் தாமரைச்செல்வி, சாரண மாவட்ட துணைச் செயலாளர் மோகன், சாரண ஒருங்கிணைப்பு ஆணையர் பிரிட்டோ, சாரணிய ஒருங்கிணைப்பு ஆணையர் பாபி பால், பயிற்சி ஆணையர்கள் உமாராணி மற்றும் சங்கர். மாவட்ட பொறுப்பாளர்கள் சந்தோஷ்குமார், தினேஷ் பாபு மற்றும் ஜான்பீட்டர் ஆகியோர் அடிப்படை பயிற்சியினை சிறப்பாக வழிநடத்தினர். .