கட்டட தொழிலாளி விஷம் குடித்து விபரீதம்

சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;

Update: 2026-02-05 08:25 GMT
கரூர் மாவட்டம், சேர்வைக்காரனுாரை சேர்ந்தவர் காளிமுத்து (50) கட்டட தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி ( 45) விவசாய கூலி வேலைக்கு சென்றிருந்தார் கடந்த, 3 காலை 10:00 மணிக்கு, காளிமுத்து அரளிவிதையை அரைத்து குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார் இதையறிந்த அக்கம் பக்கத்தினர், காளிமுத்துவை மீட்டு மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். அவரது மனைவி ராஜலட்சுமி கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News