விசிக குளித்தலை சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம்

மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் தலைமை;

Update: 2026-02-05 15:01 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் குளித்தலை காவிரி நகரில் உள்ள கிராமிய கூட்ட அரங்கில் குளித்தலை சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பி.எல்.ஏ 2 விற்கான முகவர்கள் தேர்வு செய்தல், ஒன்றிய கவுன்சிலர்கள் வாரியாக ஒன்றியங்கள் பிரித்தல், பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் வழக்கறிஞர் ஸ்டாலின், மண்டல துணை செயலாளர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் நிர்வாகிகள் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும், கட்சியை வலுப்படுத்துதல் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினர். இந்நிகழ்வில் தோகைமலை, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் நங்கவரம், மருதூர் பேரூர் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தாய் மண் சூர்யா நன்றி தெரிவித்தார்.

Similar News