திமுகவின் ஓட்டு திருட்டை தடுக்க தவெகவின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும் - மாவட்ட செயலாளர் பேச்சு..

இராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள பாலி கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் திமிரி கிழக்கு ஒன்றியத்தின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் கிளைக் கழக செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் திமிரி ஒன்றிய கழக செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2026-02-06 14:52 GMT
திமுகவின் ஓட்டு திருட்டை தடுக்க தவெகவின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும் - மாவட்ட செயலாளர் பேச்சு.. இராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள பாலி கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் திமிரி கிழக்கு ஒன்றியத்தின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் கிளைக் கழக செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் திமிரி ஒன்றிய கழக செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய பொருளாளர் பாலி சீனுவாசன், சரவணன், விகேஷ்வரன் கோவிந்தராஜ், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்மோகன் பேசியதாவது, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றிகளம் ஆகும். ஆகவே ஒவ்வொரு பூத்து கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் கிளை செயலாளர்களும் தேர்தலுக்கான வேலையை செய்வதோடு திருட்டு திமுக அரசின் திருட்டு ஓட்டு தில்லு முல்லை கண்காணிக்க வேண்டும். அதேபோல் தற்பொழுது உள்ள திமுக ஆட்சியில் எங்கு திரும்பினாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கஞ்சா பயன்பாடுகள் தான் உள்ளது. எனவே இந்த திமுக அரசை ஒழித்தால் மட்டுமே தமிழ்நாடு காப்பாற்ற முடியும் அமைதியான மாநிலமாக மாறும் மேலும் தலைவர் யாரை இந்த தொகுதியில் கைகாட்டி நிற்க வைக்கிறார்களோ அவரை பெறுவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட பிகில் சின்னத்தை குழந்தைகளுக்கு வழங்கி அனைவரும் பிகில் சின்னத்தில் ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாவட்ட இணை செயலாளர் காந்திபிரசாத் உட்பட மகளிர் அணியினர், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News