பரமத்தி வேலூர் அருகே கொங்கலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.

பரமத்திவேலூர் அருகே கொங்கலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.;

Update: 2026-02-08 13:03 GMT
பரமத்தி வேலூர், பிப்.9: நாமக்கல் மாவட்டம்,  பரமத்திவேலூர் தாலுகா  படமுடிபாளையத்தில் உள்ள கொங்கலம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 6- ஆம் தேதி காலை விநாயகர் வழிபாடு, நவநாயகர் யாகம், மகாலட்சுமி யாகம், தீபாராதனையும், காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வருதலும், மாலை முதல் கால் யாக பூஜை, பூர்ணாகுதியும் நடைபெற்றது. 7- ஆம் தேதி காலை புதிய விக்ரங்களுக்கு கண் திறப்பும் ,மாலை கோபுர கலசம் வைத்தல் மற்றும் மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று காலை 8.45 மணிக்கு யாத்ரா தானம், இடம் புறப்பாடும் 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கொங்களம்மன் கோவில் கும்பாபிஷேகமும், 10 மணிக்குள் விநாயகர், மாரியம்மன், கோவில் கும்பாபிஷேகமும், 10.30 மணிக்கு மூல மூர்த்திகள் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில் பரமத்திவேலூர் மற்றும் படமுடிபாளையம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு .கொங்கலம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கொங்கலம்மன் கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Similar News