ராசிபுரம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரம்: வீரக்குமரர்கள் கத்தி போட்டு நடனம்..
ராசிபுரம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரம்: வீரக்குமரர்கள் கத்தி போட்டு நடனம்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமாக கரும்புகள் மற்றும் 500 கிலோ எடை கொண்ட வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்திருந்த வீரக்குமாரர்கள் பல்வேறு சுவாமி வேடம் அணிந்து கத்தி போடும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து திருவிளக்கு ஜோதி ஏற்றி ராசிபுரம் முக்கிய வீதி வழியாக இக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஊர்வலம் சென்றனர். வழி நெடுகிலும் வீர குமாரர்கள் கத்தி போட்டு நடனமாடி அனைவரையும் கவர்ந்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன..