நரியம்பாடி கிராமத்தில் உள்ள சப்த கன்னியம்மன் கோயில் மகாகும்பாபிஷேகம்.

பெரணமல்லூர் அருகே நரியம்பாடி கிராமத்தில் உள்ள சப்த கன்னியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாகும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2026-02-09 02:02 GMT
ஆரணி, பெரணமல்லூர் அருகே நரியம்பாடி கிராமத்தில் உள்ள சப்த கன்னியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகாகும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பெரணமல்லூர் அடுத்த நரியம்பாடி பகுதியில் உள்ள பொதுமக்களின் கிராம தேவதையாக சப்த கன்னியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள அங்காள பரமேஸ்வரிஅம்மன், பெரியாண்டவர், கன்னியம்மன் மற்றும் முனீஸ்வரன் உள்ளிட்ட சன்னதிகள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகம் முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு மகாகணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து வாஸ்துசாந்தி, பிரவேசபலி, முதலாம் கால யாகபூஜை, கோபூஜை, கஜபூஜை, தம்பதிபூஜை மற்றும் 2ம் கால யாகபூஜையும், மகாசங்கல்பமும் மகாபூர்ணாஹூதியும் நடைபெற்றது. பின்னர் மேளதாள ஊர்வலத்துடன் புனிதநீர் சிவாச்சாரியார்களால் யாகசாலையிலிருந்து கொண்டுவரப்பட்டு வேதமந்திரங்கள் கூறி சப்த கன்னியம்மன் கோயில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடத்தி மகாதீபாராதனை நடைபெற்றது. மேலும் மூலவர், பரிவாரமூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Similar News