மாதா கோவில் சிலைகளை சூறையாடி சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்.
ராசிபுரம் வட்டம் அணைப்பாளையம் கிராமம் புலையின் 59/11 அருந்ததிய குல மூதாதையர் வழிபாட்டு மாதா கோவில் நில அபகரிப்பு சிலைகளை சூறையாடி சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்டுக் கொடுக்க கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மட்டும் அணைபாளையம் கிராமம் புல எண் 59/1 அருந்ததியர் குல வழிபாட்டு மாலா கோவில் உள்ளது.கடந்த 1/2/2026 அன்று இரவு பட்டியலின அருந்ததியர் மக்கள் தெய்வங்களாக வனங்கும் சிலைகளை கற்களை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி சூறையாடி அப்புறப்படுத்தியுள்ளனர் மேலும் அவ்விடத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாலா கோவிலுக்கு அரணாக இருந்த மரங்களை வெட்டி அழித்து விட்டனர் பட்டியலின மக்கள் அருந்ததியர் குலதெய்வம் வழிபாட்டை சீர்குலைத்து சிலைகளை சூறையாடி சென்றுள்ளனர்.பட்டியலின அருந்ததியர் மக்கள் தெய்வங்களாக காலங்காலமாக வழிபட்டு வந்த சமய வழிபாட்டு சிலைகளை தெய்வங்கள் என்றும் பாராமல் சூறையாடியவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆதிக்க சாதியினரின் தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நீ ஒரு தாக்குதல் அவர்கள் நடத்துவதற்கு முன்பாக போர்க்கால அடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து பட்டியல் என அருந்ததியர்களின் உயிருக்கும் உடைமைக்கும் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்.பட்டியலென அருந்ததியர் மக்கள் காலங்காலமாக வழிபாடுகள் செய்து வந்து தற்போது காணாமல் போன அவர்களது முன்னோர்களின் நினைவு சிலைகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.250 ஆண்டுகளுக்கு மேலாக காலங்காலமாக பட்டியலான மக்கள் தெய்வீக வேத சமய வழிபாடுகள் செய்து வந்த மாலா கோயில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்