திருச்செங்கோடு நகராட்சியில் கொத்தடிமைகள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திருச்செங்கோடு நகராட்சியில் கொத்தடிமைகள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு உறுதிமொழி வாசிக்க நகராட்சி அலுவலர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் என பலரும் உறுதிமொழி ஏற்றனர்;

Update: 2026-02-09 13:59 GMT
கொத்தடிமைகள் ஒழிப்பு தினத்தை ஒட்டி திருச்செங்கோடு நகராட்சியில் இன்று கொத்தடிமை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு உறுதி மொழியை வாசிக்க நகராட்சி பணியாளர்கள் வழிமொழிந்தனர். இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும் வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும் கடன் பிணைத்தொகை வழங்கி கட்டாய பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால் கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் கொத்தடிமை தொழிலாளர் முறையை எந்த தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்ச்சி செய்வேன் என்றும் எந்த தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன் பணம் கொடுத்து பணிய அமர்த்துவதை தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும் கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்கு பணியாற்றுவேன் என்றும் இந்திய அரசமைப்பு சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தை சீறிய முறையில் செயல்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என்று நான் உளமாற உறுதி கூறுகிறேன் என்று முன்மொழிய நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் நகராட்சி பணியாளர்கள் நகர் மன்ற உறுப்பினர்கள் என பலரும் வழிமொழிந்தனர்.

Similar News