தி.மு..க.விற்கு இனி எதிர்காலம் இல்லை முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
குமாரபாளையம் அருகே வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று பேசினார்.;
குமாரபாளையம் அருகே வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் வடக்கு ஒன்றிய செயலர் குமரேசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று பேசியதாவது: தி.மு/க. ஆட்சியில் சொன்னதை செய்யாத பணிகள் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும். எஸ்.ஐ.ஆர். பணிகள் அனைத்து வார்டுகளில் நமது கழக நிர்வாகிகள் எச்சரிக்கையுடன் செயல்படுத்த வேண்டும். 2026ல் அ.தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி, எப்போது அ.தி.மு.க. ஆட்சி வருமென ஆர்வமுடன் நான் எங்கு சென்றாலும் பொதுமக்கள் கேட்டு வருகிறார்கள். இது மாநிலம் முழுதும் உள்ள நிலை. பொதுமக்கள் தி.மு.க. ஆட்சியில் கடும் அதிருப்தியில் உள்ளனர். இரண்டு மாத காலம் நாம் உழைக்கும் உழைப்புதான், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையவும், அண்ணன் இடைப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவதும் முடியும். உங்கள் உழைப்பு அடுத்து வரும் 5 ஆண்டு கால ஆட்சிக்கு மட்டும் அல்ல, 50 ஆண்டு கால அம்மாவின் ஆட்சி அமைய போகிறது. அதிக ஓட்டு எண்ணிகையில் நமது மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளும் வெற்றி பெற வேண்டும். தி.மு.க.விற்கு இனி எதிர்காலம் இல்லை. தி.மு.க, ஆட்சி மீது பொதுமக்களுக்கு இருக்கும் கோபத்தை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இலவச அடுக்குமாடி வீடு, ஆண்களுக்கும் இலவச பஸ், பெண்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய், மானிய விலையில் ஸ்கூட்டி, கல்விக் கட்டணம் ரத்து, உள்ளிட்ட பல திட்டங்களை இடைப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். வீடு வீடாக இவைகளை விளக்கமாக எடுத்து சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் தெற்கு ஒன்றிய செயலர் செந்தில், தட்டான்குட்டை ஊராட்சி முன்னாள் தலைவி புஷ்பா, குப்பாண்டபாளையம், பல்லக்காபாளையம் ஊராட்சி நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.