படியில் நின்ற போதை நபர் ஓடும். பேருந்தில் தவறி விழுந்து பலி

குமாரபாளையம் அருகே படியில் நின்ற போதை நபர் ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்து சம்பவ இடத்தில் பலியானார்.;

Update: 2026-02-09 16:00 GMT
குமாரபாளையத்தில் இருந்து நாமக்கல் செல்லும் தனியார் பேருந்தில் நேற்று மாலை 04:25 மணியளவில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் வட்டமலையில் ஏறியுள்ளார். பல்லக்காபாளையம் என டிக்கெட் கேட்டு வாங்கியுள்ளார். பல்லக்காபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, இவர் படியில் வந்து நின்றுள்ளார். நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். நேரில் சென்ற குமாரபாளையம் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் விசாரணையில் இவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

Similar News