டபுள் இன்ஜின் இருந்தால் மட்டுமே ஒரு மாநிலம் வளர்ச்சியை அடையும் திருச்செங்கோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
டபுள் இன்ஜின் இருந்தால் மட்டுமே ஒரு மாநிலம் வளர்ச்சியை அடையும் 1000 பணத்துக்காக ஆசைப்பட்டு திமுகவுக்கு வாக்களித்தால் உங்கள் குடும்பத்து குழந்தைகளின் எதிர்காலம் பாழாகிவிடும் திருச்செங்கோட்டில் என் டி ஏ கூட்டணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி பேச்சு;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழகத்தின் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை கண்டித்து பாஜக நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தலைமை தாங்கினார்.கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் தங்கமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகள் காலம் இருண்ட காலமாக இருந்து வந்தது. குழந்தை முதல் பெண்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சி காலத்தில் தமிழகம் பாதுகாப்பில் முதன்மை மாநிலமாக இருந்து வந்தது. திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி முடிவுக்கு வர இன்னும் இரண்டு மாதங்களே உள்ளது. அடுத்து அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வெற்றி பெறுவது உறுதி. மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக வருவார் திமுக அரசு கமிஷன்களை பெறுவதற்காகவே புதிய புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. நாங்களும் இப்பொழுது சொல்கிறோம் டபுள் இன்ஜின் இருந்தால் மட்டுமே ஒரு மாநிலம் வளர்ச்சியை அடையும் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் தேவை என்றால் மத்திய மாநில அரசுகள் டபுள் இன்ஜினாக செயல்பட்டால் தான் திட்டங்கள் தமிழகத்திற்கு வந்து சேரும். எடப்பாடி பழனிச்சாமி இருக்கும்போது 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு கொண்டுவரப்பட்டது டபுள் இன்ஜின் இருந்ததால் தான் அந்தத் திட்டங்களை கொண்டு வந்தார். அதனால் மட்டுமே தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது. இந்த ஐந்து ஆண்டுகளில் இந்த திமுக அரசு ஒரு மருத்துவக் கல்லூரிகள் கூட கொண்டு வரவில்லை. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் டபுள் இன்ஜின் இருந்தால் மட்டுமே தமிழகம் வளர்ச்சி அடைய முடியும். திமுக மட்டுமே பிஜேபி வந்தால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து வருகிறது. தற்போது விஜய் வந்துள்ளதால் சிறுபான்மையினரின் வாக்குகள் விஜய்க்கு சென்று விடுமோ என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதில் கூட அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். திமுகவினர் இவர்கள் எப்படி மக்களை காப்பாற்றுவார்கள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் தீபம் ஏற்ற விடாமல் மாவட்ட ஆட்சியரே நான் செய்தது தவறு தான் என்று திமுக அரசு செய்ததற்கு மன்னிப்பு கேட்கும் அளவிற்கு மோசமான ஆட்சியாக மாறி உள்ளது.இந்த முறை பெண்கள் ஆயிரம் ரூபாய் பணத்திற்கு ஏமாந்து திமுகவிற்கு வாக்களித்தால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் வீணாகிவிடும் தமிழக முழுவதும் போதை கலாச்சாரம் வளர்ந்து வருகிறது பள்ளி மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகமாகி உள்ளது கஞ்சா பழக்கம் நாடெங்கும் அதிகமாக உள்ளது திமுகவுக்கு வாக்களித்தால் உங்கள் சொத்துக்கு பாதுகாப்பு இருக்காது திமுகவுக்கு வாக்களித்தால் வீட்டு வரி உயரும் விலைவாசி ஏறும்எனவே 2026 தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்.மகளிர் உரிமைத் தொகை 2000 ஆண்களுக்கும் இலவச பேருந்து வீடில்லாதவர்களுக்கு வீடு 8 லட்ச ரூபாய் செலவில் கட்டி கொடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தொலைக்காட்சி மற்றும் செய்தி ஊடகங்கள் மிரட்டப் படுகின்றனர். செய்தியாளர்கள் செய்தி கொடுத்தாலும் தலைமையில் அரசு மிரட்டுவதால் எங்கள் செய்திகளை சிறியதாக போடுகிறார்கள் எனவே தான் எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூற வீடு வீடாகச் சென்று விலைவாசி உயர்வு சொத்து வரி உயர்வு குறித்து எடுத்து கூறச் சொல்லி இருக்கிறார். எனக் கூறினார். இந்த கூட்டத்தில் திருச்செங்கோடு அதிமுக முன்னாள் சட்டமன்ற பொன்.சரஸ்வதி, நாமக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தலைவர்கள் திரு M ராஜேஷ்குமார், திரு KP சரவணன் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் சுதாகர், தமாக மாவட்ட செயலாளர் செல்வக்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவி த சுகந்தி, மாவட்ட பொது செயலாளர் N மகேஸ்வரன், பிரச்சார பிரிவு மாநில செயலாளர் EP ரமேஷ், மாவட்ட துணை தலைவர்கள் R.ஈஸ்வரன், M. செங்கோட்டு வேலு, K அப்புசாமி, மாவட்ட செயலாளர்கள் A பிரகாஷ், Pநீதிவடிவேல், மற்றும் திருச்செங்கோடு நகர தலைவர் S தினேஷ் மற்றும் ஒன்றிய தலைவர்கள் S சசிதேவி, பன்னீர் செல்வம், பூச்சப்பன் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள், மகளிர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.