நாமக்கல் மாவட்டத்தில் நாளை முழுநேர மின்தடை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் நாளை (11.02.2026) ஒருநாள் முழுவதும் மின்சாரத் தடை அமல்படுத்தப்படும் என மின்வாரியத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு மற்றும் மின் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் இந்த மின்தடை ஏற்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.;

Update: 2026-02-10 13:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இதனால் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும். அவசர தேவைகளுக்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு பொதுமக்களிடம் மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.குடிநீர் சேமிப்பு, மின்சார சாதனங்கள் பாதுகாப்பு, மாற்று விளக்குகள் மற்றும் அவசர உபயோகப் பொருட்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மின்சாரம் மீண்டும் வழமையான நிலைக்கு கொண்டு வர பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News