நரசிம்மர் கோயிலில் மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யப்பட்டன.
தம்பதியினருக்கு சேலை, வேட்டி, சட்டை வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டன;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2026-02-10 13:41 GMT
நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு நரசிம்மர் திருக்கோயிலில் 70 வயது பூர்த்தியடைந்த தம்பதியினர் 3 பேருக்கு திருக்கோயில் மூலம் சிறப்பு (70 வது கல்யாணம்) செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட தம்பதியினர் ஒருவருக்கொருவர் மாலைகளை மாற்றிக்கொண்டு நெற்றில் திலகமிட்டுக்கொண்டனர்.இதனையடுத்து திருக்கோயில் சார்பில் மூத்த தம்பதியினருக்கு சேலை, வேட்டி, சட்டை, பழத்துடன் தாம்பூலத்தட்டுகளை நரசிம்மர் கோயில் அறங்காவலர் குழுவினர் வழங்கி வாழ்த்தி ஆசிப்பெற்றனர். இதனையடுத்து கோயிலுக்கு வந்த பக்தர்களும் மூத்த தம்பதியினரிடம் ஆசிப்பெற்றுக்கொண்டனர்.