ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் திருவிழா: அம்மன் திருவீதி உலா..
ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் திருவிழா: அம்மன் திருவீதி உலா..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவானது 5.2.2026 வியாழக்கிழமை தொடங்கி 21.2.26 சனிக்கிழமை பிறை நடைபெறுகிறது. தினந்தோறும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் மற்றும் உற்சவர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டளைதாரர்களால் தினந்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைக்கு பின்னர் கட்டளைதாரர்களால் அன்ன வாகனம் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி சுவாமி திருவீதி உலா முக்கிய வீதி வழியாக மேள வாத்தியங்களுடன்சென்றது.திருவீதி உலா வந்த அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த சிறப்பு அலங்காரத்தை அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் பூசாரிகள் மாதேஸ்வரன், விஸ்வநாதன், சுப்பிரமணியம், பிரபு, சுதாகர், உள்ளிட்டோர் செய்திருந்தனர்.