குளித்தலை தாலுக்கா தென்கரை பாசன விவசாயிகள் சங்கம் தண்ணீர் திறந்து விட கோரிக்கை

ஆற்றுப் பாதுகாப்பு பிரிவு அலுவலகம் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு;

Update: 2026-02-11 04:39 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா தென்கரை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் துணைத் தலைவர் வாழைக்காய் வியாபாரி சேட்டு தலைமையில் குளித்தலை நீர்வளத்துறை ஆற்று பாதுகாப்பு பிரிவு உதவி பொறியாளர் அலுவலரிடம் கோரிக்கை மனு ஒன்றை இன்று அளித்தனர். அதில் தென்கரை மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் பயிர் செய்துள்ள வாழை, கரும்பு, வெற்றிலை பயிர்களுக்கு தண்ணீர் தேவையை கருதி வருகின்ற பங்குனி, சித்திரை மாதங்களில் வீசும் சுழல் காற்றில் இருந்து வாழை பயிர்களை காப்பாற்ற மூங்கில் குச்சிகளை போடுவது அவசியம். அதற்கு தண்ணீர் மிகவும் தேவைப்படுகிறது. இல்லையென்றால் தொடர்ந்து பயிர்கள் கருகும் அபாயம் ஏற்படும். இதனால் ஏக்கருக்கு மூன்று லட்சம் வரை இழப்பீடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே 350 கன அடி நீர் தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் சார்பில் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட உதவி பொறியாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்நிகழ்வில் சங்க பொருளாளர் மருதூர் சோமசுந்தரம், துணைச் செயலாளர் மணத்தட்டை கண்ணதாசன், ரவிசங்கர், ஜெயக்குமார், மகாலிங்கம், உள்ளிட்ட விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர். இதே போல் குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்திலும் இதே கோரிக்கை மனுவை அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News