கிருஷ்ணராயபுரத்தில் கூட்டுறவு சங்க கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாம சுந்தரி கலந்து கொண்டு திறந்து வைத்தார்;

Update: 2026-02-11 08:52 GMT
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட திருக்காம்புலியூரில் ரூ.30 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நவீன மயமாக்கப்பட்ட வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தானிய கிடங்கு கட்டிடத்தையும் எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்து வைத்தார். அலுவலகத்தையும் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ரூ. 21 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட தொடக்க நிகழ்ச்சிக்கு குளித்தலை கூட்டுறவு துணைப்பதிவாளர் திருமதி தலைமை வகித்தார். அதனைத் தொடர்ந்து பாலராஜபுரம் ஊராட்சி சின்னமநாயக்கன்பட்டியில் புதிய பகுதிநேர ரேஷன் கடை, சேங்கல் ஊராட்சி ஊஞ்சலைப்புதூர் மற்றும் குட்டிக்காரன்புதூரில் புதிய பகுதிநேரரேஷன் கடைகள், முத்துரெங்கம்பட்டி ஊராட்சி பம்பரமுத்தாம்பட்டியில் புதியபகுதிநேர ரேஷன் கடைகளையும் எம்எல்ஏ சிவகாமசுந்தரி திறந்துவைத்து குடும்ப அட் டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார் நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தணிக்கையாளர் சங்கர்,கூட்டுறவு சார்பதிவாளர் ரமேஷ்,கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News