வருகிற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து மார்ச் ஒன்றாம் தேதி முடிவு செய்யப்படும். கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநில தலைவர் வாசு கரூரில் பேட்டி.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து மார்ச் ஒன்றாம் தேதி முடிவு செய்யப்படும். கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநில தலைவர் வாசு கரூரில் பேட்டி.;
வருகிற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து மார்ச் ஒன்றாம் தேதி முடிவு செய்யப்படும். கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநில தலைவர் வாசு கரூரில் பேட்டி. கோவில் பூசாரிகள் நலச்சங்க கரூர் மாவட்ட மாநாடு மற்றும் 21 ஆம் ஆண்டு துவக்க விழா கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாநில தலைவர் வாசு தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில செயலாளர் சங்கர் மாநில பொருளாளர் சுந்தரம் மாநில துணைத்தலைவர் கணேசன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மண்டல தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள், பொருளாளர்கள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நடைபெற்ற இந்த மாநாட்டில் சங்க வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் வாசு, இன்று கரூரில் கோவில் பூசாரிகள் நலச் சங்க மாநாடு நடைபெற்று வருகிறது. இதே போல தமிழகம் முழுவதும் உள்ள கோவில் பூசாரிகள் நல சங்கம் சார்பாக மாநாடு நடத்தி பூசாரிகளிடம் கருத்து கேட்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை பூசாரிகளுக்கு வழங்கி வந்த போதும், கிராம கோவில் பூசாரி நலவாரியத்திற்காக ஒன்பது பேர் அலுவல் சாரா உறுப்பினராக பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் நடைமுறைப்படுத்த படவில்லை. தற்போது ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பூசாரிகளுக்கு ரூபாய் 1500 வழங்கப்படுவதை ரூ.6000-ம் ஆக உயர்த்தப்பட வேண்டும். கிராமப்புற பூசாரிகளின் ஓய்வூதியம் 4000 வழங்கப்படுவதை 6000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.பூசாரி இறந்து விட்டால் அவரது மனைவிக்கு பாதி தொகை வழங்க வேண்டும். திருக்கோவில் நிலங்களில் வசித்து வரும் பூசாரிகளுக்கு நிபந்தனையின் பேரில் பட்டா வழங்க வேண்டும். கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் மாடுகளை பூசாரிக்கு வழங்க வேண்டும். அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பணியாற்றக்கூடிய பூசாரிகளுக்கு துறை ரீதியான ஓய்வூதியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் இருக்கக்கூடிய 6 லட்சம் பூசாரிகள் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்ய சேலத்தில் மார்ச் ஒன்றாம் தேதி நடைபெறும் மாநில பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.