திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு அறக்கட்டளை சார்பாக ரத்த தானம் முகாம் நடத்தி கொடுத்ததற்கு பாராட்டு
திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு அறக்கட்டளை சார்பாக ரத்த தானம் முகாம் நடத்தி கொடுத்ததற்கு பாராட்டு மற்றும் அரசு மருத்துவமனைக்கு தேவையான சமையல் உபகரணங்கள் வழங்கும் விழா;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் டி என் 34 அறக்கட்டளை சார்பாக உடல் தானம் உறுப்பு தானம் மற்றும் ரத்த தான முகாம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்த முகாமை மிகச் சிறப்பாக நடத்திக் கொடுத்த மருத்துவர் களையும் செவிலியர் களையும் கௌரவிக்கும் விதமாகஅரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட அனைவரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டனர். அரசு மருத்துவமனைக்கு தேவையான இட்லி பானை வெள்ளை காகிதங்கள் எழுது பொருட்கள் என பல்வேறு வழங்கினர். இதுகுறித்து tn34 அறக்கட்டளையின் தலைவர் மணிகண்டன் பேசும்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு ரத்த தானம் உடல் தானம் உறுப்பு தான முகாமை நடத்திக் கொடுத்த மருத்துவர்களுக்கும் செவிலியர் களுக்கும் பாராட்டு விழா நடத்தப் பட்டது.புதிய கட்டிடம் கட்டப்பட்டு இரண்டு கட்டிடங்களாக செயல்பட்டு வரும் அரசு மருத்துவ மனையில் 300 படுக்கைகள் உள்ளது. இந்த திருச்செங்கோடு அரசு தலைமை மருத்துவ மனையில்உட்புற நோயாளிகளாக உள்ளவர்களுக்கு காலை உணவு தாமதமின்றி வழங்க ஒரே நேரத்தில் 150 எண்ணிக்கையில்இட்லி தயாரிக்க ரூ.15,000 மதிப்பிலான இட்லி பானை மற்றும் பல்வேறு பொருட்களை வழங்கி உள்ளோம் வழங்கப்பட்ட பொருள்கள் சிறியதாக இருந்தாலும் அரசு மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என்றநல்ல நோக்கத்தில் வழங்க உள்ளோம் அதேபோன்று எங்கள் அறக்கட்டளை சார்பாக 500க்கும் மேற்பட்டவர்கள் உடல் தானம் உறுப்பு தானம் செய்துள்ளனர் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் கஜேந்திரன் ராஜா சதீஷ்குமார் ராஜாராம் சத்யா சிலம்பரசன், அரசு மருத்துவமனைகள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்