சேலம் சிறை தியாகிகள் நினைவாக திருச்செங்கோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் கொடியேற்று விழா
சேலம் சிறை தியாகிகள் நினைவாக திருச்செங்கோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர, ஒன்றிய குழுக்கள் சார்பில் கட்சி அலுவலகம் முன்புகொடியேற்று விழா நடைபெற்றது;
சேலம் சிறை தியாகிகள் நினைவாக திருச்செங்கோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர, ஒன்றிய குழுக்கள் சார்பில் கட்சி அலுவலகம் முன்பு கட்சியின் ஒன்றிய குழு செயலாளர் தோழர் கே. கதிர்வேல் அவர்கள் தலைமையில் கட்சியின் மூத்த தலைவர் தோழர். ஏ. ஆதிநாராயணன் அவர்கள் கொடியேற்றி வைத்தார் .இதில் கட்சியின் நகர செயலாளர் தோழர். எஸ். சீனிவாசன் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ஆர். வேலாயுதம் ஆர். மனோகரன் முன்னாள் நகர செயலாளர் ஐ. ராயப்பன் கட்சியின் நகர குழு உறுப்பினர்கள் எஸ். கந்தசாமி கொல்லப்பட்டி எஸ். குமரவேல் விசைத்தறி தொழிலாளர்கள் சங்க செயலாளர் பி. முருகேசன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ். சேகரன் உட்பட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். அதேபோல் சேலம் சிறைத்தியாகி தோழர். காவேரி அவர்களின் சொந்த ஊரான சூரியம் பாளையத்தில் கட்சியின் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் தோழர் ஆர். வேலாயுதம் அவர்கள் கொடியேற்றி வைத்தார் .இதில் கட்சியின் நகர செயலாளர் எஸ். சீனிவாசன் ஒன்றிய செயலாளர் கே. கதிர்வேல் மற்றும் மூத்த தோழர்கள் ஆர். நடேசன் எஸ். முத்துசாமி வழக்கறிஞர் தோழர். சேகரன் ,தோழர் ராயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்