அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.;
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத் தேர்வுக்கு தயாராகும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.. இம்மாணவர்களுக்காக பள்ளி மேலாண்மை குழு சார்பாக சுண்டல், நிலக்கடலை, பச்சைப்பயறு, உழுந்தங்கஞ்சி, சந்தகை, மக்காச்சோளம், போன்ற சத்தான உணவு பொருட்கள் தினசரி 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது... .இதற்காக ஒவ்வொரு நாளும் மூவாயிரம் ரூபாய் வரை செலவு செய்து, தினம் ஒரு நன்கொடையாளர் எனும் வகையில் மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்த உணவு வகைகள், மாணவர்களின் உடலுக்கு தேவையான சக்தியையும், நினைவாற்றலையும் மேம்படுத்தும் என கூறப்படுகிறது. பள்ளி மேலாண்மை குழு தலைவி ரம்யா, உறுப்பினர்கள் ரேவதி, ராஜேந்திரன், நிர்மலா உள்ளிட்ட பலர் உடனிருந்து ஏற்பாடு செய்து வருகிறார்கள்.