நாமக்கல் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் லேப்டாப் வழங்கல் விழா – மேயர் கலாநிதி பங்கேற்பு

இந்த லேப்டாப்பை போட்டித் தேர்வுகளுக்குப் பயனுள்ளதாக பயன்படுத்தி, டிஜிட்டல் உலகில் தங்களைத் திறன் மிக்கவர்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் ! - மேயர் கலாநிதி அட்வைஸ்;

Update: 2026-02-11 16:17 GMT
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இளநிலை இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது.கல்லூரி முதல்வர் முனைவர் மு. ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,நாமக்கல் மாநகராட்சி மேயர் து. கலாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 541 மாணவர்களுக்கு லேப்டாப்புகளை வழங்கி மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி பேசுகையில்..“தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள இந்த லேப்டாப்புகளை மாணவர்கள் கல்வி, மேற்படிப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்குப் பயனுள்ளதாக பயன்படுத்தி, டிஜிட்டல் உலகில் தங்களைத் திறன் மிக்கவர்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்” என்று அறிவுரை வழங்கினார். இந்த விழாவில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News