கரூரில் தேர்தலுக்கு முன்பாகவே காவிரி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளை தொடர்பாக எடுக்கும் விஸ்வரூபம். கரூரில் பரபரப்பை ஏற்படுத்தும் அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு.

கரூரில் தேர்தலுக்கு முன்பாகவே காவிரி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளை தொடர்பாக எடுக்கும் விஸ்வரூபம். கரூரில் பரபரப்பை ஏற்படுத்தும் அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு.;

Update: 2026-02-12 08:48 GMT
கரூரில் தேர்தலுக்கு முன்பாகவே காவிரி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளை தொடர்பாக எடுக்கும் விஸ்வரூபம். கரூரில் பரபரப்பை ஏற்படுத்தும் அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு. கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த மல்லம்பாளையம் கிராமத்தில் காவிரி ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேரில் சென்று பார்வையிட்டு வீடியோ ஆதாரங்களை நேற்று வெளியிட்டோம். காவிரி ஆற்றில் தொடர்ந்து இரவு பகலாக நடக்கும் மணல் கொள்ளை குறித்து வந்த புகாரை அடுத்து இது தொடர்பாக நேரில் பார்வையிட்டோம். காவிரி ஆற்று பகுதியில் 5 டிப்பர் லாரி, 5 ஹிட்டாச்சி வாகனங்கள் இருந்தன. மாலை 4 மணிக்கு மேல் சென்று மணல் கொள்ளை குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்தோம். இரவு 10.30 மணிக்கு காவல்துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இதற்கிடையே ஆளும் கட்சியினரின் பல்வேறு நாடகங்கள் அரங்கேறி உள்ளது. இதில் வன்னியர் மக்கள் கட்சி என்ற அமைப்பை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ரூபாய் 61.50 லட்சம் பண மோசடி செய்தவர் யோக்கியர் போல் பேசுகிறார். இவர் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டுமென கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆட்சியரிடம் புகார் தந்துள்ளார். 300க்கும் மேல் அடியாட்களோடு சென்று எங்கள் (அதிமுக) ஒன்றிய செயலாளர் தாக்குதல் நடத்தியதாக கூறுகிறார். எப்போதுமே மாட்டு வண்டி தொழிலாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று நினைப்பவன் நான். அவர்களை வைத்து நாடகம் நடத்துகின்றனர். நேற்று பேட்டி கொடுத்தவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள். 5 ஹிட்டாச்சியை வைத்து 50 வண்டிகளுக்கு மணல் லோடு போடலாம். நேற்று நாங்கள் வெளியிட்ட வீடியோவில் ஒரு மாட்டு வண்டி கூட இல்லை. மணல் கடத்தலை மறைப்பதற்காகவும், இன்று நடத்தும் செய்தியாளர் சந்திப்பை திசை திருப்புவதற்காகவும் என் வீட்டுக்கு அருகில் மாட்டு வண்டியை வைத்து காவல்துறை பாதுகாப்புடன் சாலை மறியல் போராட்டம் செய்கின்றனர். கோடிக்கணக்கில் தினந்தோறும் மணல் கடத்தல் நடக்கிறது. கலெக்டர், SP ஆகியோர் நான் போன் செய்தால் போன் எடுக்கவில்லை. இது தொடர்பாக ஐ.ஜி-யிடம் புகார் கொடுத்த்துள்ளேன். கடந்த ஆட்சியில் சியா கமிட்டி உத்தரவு பெற்று மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி பெற்று கொடுத்தேன். ஆனால் அதை பொய் என்று கூறி மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற்றனர். அதிமுக பிரமுகர் கேட்டதால் மணல் எடுத்ததாக கூறுகின்றனர். தற்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சியா நடக்கிறது. மாட்டு வண்டிகளை வைத்து மணல் எடுக்க எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. லாரிகள் மூலம் மணல் எடுப்பது தொடர்ச்சியாக நடைபெற்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்ற அவர், கரூருக்கு த.வெ.க. தலைவர் விஜய் வந்தபோது ஏற்பட்ட சம்பவத்தில் பதட்டம் ஏற்பட்டதுபோல, இந்த விவகாரத்திலும் ஜாதி பிரச்சனை செய்யவும், மாட்டு வண்டி தொழிலாளர்களை வைத்து திசை திருப்ப பார்க்கின்றனர். குறிப்பு: செய்தியாளர் சந்திப்பின் முடிவில் நேரடியாக மாவட்ட எஸ்.பிக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செல்போன் மூலம் அழைப்பு கொடுத்த போது, எஸ்.பி போனை எடுக்கவில்லை. அதேபோல் மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுத்தபோது, அவரது உதவியாளர் போனை எடுத்தார். ஆயினும் MR விஜயபாஸ்கரின் கேள்விக்குரிய பதில் அளிக்கவில்லை.

Similar News