கரூரில் தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைத்ததை கண்டித்து அரசு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூரில் தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைத்ததை கண்டித்து அரசு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2026-02-12 08:52 GMT
கரூரில் தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைத்ததை கண்டித்து அரசு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்டங்களாக மாற்றியதை கண்டித்தும், மீண்டும் 44 சட்டங்களாக மாற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் செல்வராணி, மாவட்ட செயலாளர் பொன்.ஜெயராம், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைத்ததை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Similar News