மோடி அரசின் தொழிலாளர் விரோத போக்கைகண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியை சேர்ந்த பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சாலை மறியல்
ஒன்றிய மோடி அரசை கண்டித்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத சட்டங்களை கைவிட வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்275 பேர் கைது;
நாடு முழுவதும் ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து இன்று வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியை சேர்ந்த பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ ஐ டி யு சி யின்மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார் சிபிஐ நகரச் செயலாளர் சுகுமார் முன்னிலை வகித்தார் ஏ ஐ டி சி மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன் போராட்டத்தை துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்துதொழிலாளர்கள் பேரணியாக வந்து திருச்செங்கோடு இந்தியன் வங்கி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் 44 தொழிலாளர் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளாக இயற்றியதை வாபஸ் வாங்க வலியுறுத்தியும் , விதைச் சட்டம் 2025 திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் சிறப்பாக செயல்படும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை சீர்குலைக்காதே என வலியுறுத்தியும் கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கை கல்வி உரிமை வேலை உரிமையை பறிக்காதே என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். சாலை மறியலில் ஈடுபட்ட 41 பெண்கள் உட்பட 275 பேரைபோலீசார் கைது செய்து திருசெங்கோடு கொங்கு வேளாளர் சமுதாயக்கூடத்தில் அடைத்தனர். பின்னர் சற்று நேரத்தில் அனைவரையும் விடுதலை செய்தனர்.சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.