திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் பொதுக் கழிப்பிடங்கள் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும் பணி பூமி பூஜை

திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் பொதுக் கழிப்பிடங்கள் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும் பணி கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி பூமி பூஜை செய்து துவக்கம் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு பணிகளை துவக்கி வைத்தார்;

Update: 2026-02-12 10:20 GMT
திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் 3 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது ஏழாவது கட்டமாக நடைபெற்ற இந்த பணிகளில்17 ஆவது வார்டு சட்டை முதல் பகுதியில் 190 மீட்டர் நீளமுள்ள கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நகராட்சி பொறியாளர் சரவணன் ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர். ஐந்தாவது வார்டு பகுதியில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் செங்கோடம்பாளையம் இடுகாடு அருகே 36 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில்கட்டி புடிக்கப்பட்டகட்டி முடிக்கப்பட்ட நவீன கழிப்பிடம்திறப்பு விழா நடைபெற்றது நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கலந்து கொண்டு கழிப்பிடத்தை திறந்து வைத்தார் இதே போல் நெசவாளர் காலனி உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேம்பாட்டு திட்டம் 2023 24 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு திறந்து வைத்தார் இதே போல் ஒரு 15 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டகலப்படத்தையும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு திறந்து வைத்தார்.ஐந்தாவது வார்டு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் 4லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில்அமைக்கப்படவுள்ள 120 மீட்டர்நீளமுள்ள மழை நீர் வடிகால் பணியினையும், அம்பிகா சைசிங் ரோடுபகுதியில் 0.63மீட்டர் நீளமுள்ளரோடு அமைக்கும் பணியினையும்கோம்பை நகர் பகுதியில் மூன்றாவது வார்டு ஐந்தாவது வார்டு இணைக்கும் பகுதியில் ஒரு பத்து லட்சம் மதிப்பீட்டில் 150 மீட்டர் நீளமுள்ள மழை நீர் வடிகால் அமைக்கும் பணி யிணையும்,25வது வார்டு சின்ன மாரியம்மன் கோவில் தெரு மற்றும் மேட்டு தெரு எண் 4 மேட்டு தெரு எண் இரண்டு ஆகிய பகுதிகளில்கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளையும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சிகளில்நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு நகர் மன்ற துணைத் தலைவர் கிழக்கு நகர திமுகசெயலாளர் கார்த்திகேயன்நகர்மன்ற உறுப்பினர்கள் ஐந்தாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ராஜா,17 வது வார்டு திவ்யா வெங்கடேஸ்வரன்,சண்முகவடிவு, செல்லம்மாள் தேவராஜன், செல்வி ராஜவேல் தாமரைச்செல்வி மணிகண்டன் ஆகியோர் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் பகுதி பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Similar News