விபத்தில் இருவர் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிக்கு 01 வருடம் சிறை தண்டனை

மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி உத்தரவு

Update: 2024-08-20 01:37 GMT
பெரம்பலூரில் கடந்த 2022 -ம் ஆண்டு நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிக்கு 01 வருடம் சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தண்டனை வழங்கிய பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம். பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு சேலம் மாவட்டம் ராயர் பாளையத்தை சேர்ந்த கண்ணுசாமி (48) என்பவர் விபத்து ஏற்படுத்தியதில் 02 நபர்கள் உயிரிழந்த வழக்கில் கண்ணுசாமி அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்டுத்திய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற விசாரணையில் இருந்த மேற்படி வழக்கில் 19.08.2024-ம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவ்வழக்கின் குற்றவாளியான சேலம் மாவட்டம் ராயர் பாளையத்தை சேர்ந்த கண்ணுசாமி (48) என்பவருக்கு 01 வருடம் மெய்க்காவல் சிறை தண்டனையுடன் ரூபாய் 2000/- அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 4 வார காலம் மெய்க்காவல் சிறை என்றும் பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா வெகுவாக பாராட்டினார்.

Similar News