ஆயுள் தண்டனையுடன் கூடிய 06 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 06 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,11,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

Update: 2024-12-11 16:41 GMT
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வேம்பார்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் (எ) குருசிலி (51) என்பவரை சாணார்பட்டி காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின்படி சாணார்பட்டி காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் தங்க முனியசாமி, நீதிமன்ற முதல் நிலை காவலர் நதியா மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி முருகன் என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 06 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,11,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இந்தாண்டு இதுவரை 68 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News