குடும்ப மின்னணு அட்டைகளை 08 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Update: 2024-08-20 01:10 GMT
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், குடும்ப மின்னணு அட்டைகளை 08 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார் இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தரராமன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திக்கேயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Similar News