பிளஸ் 1 மார்க் குறைந்ததால் - மாணவி தற்கொலை முயற்சி

துயரச் செய்தி;

Update: 2025-05-18 06:05 GMT
கறம்பக்குடி அருகே தட்டாவூரணி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகள் ரிசிதா (17). இவர் கறம்பக்குடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி யில் பிளஸ் 1 படித்தார். இவர் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில்430 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பிளஸ் 1 பொதுத்தேர்வில் 363 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததற் காக அவரது தாய் நேற்று காலை திட்டியதாக கூறப்ப டுகிறது. இதில் விரக்தியடைந்த ரிசிதா தண்ணீரில் விஷம் கலந்து குடித்துவிட்டார். இதை பார்த்து அவரது தங்கை ஆர்த்தி அலறினார். அக்கம் பக்கம் உள்ளவர் கள் அவரை மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனை யில்சேர்த்தனர்.

Similar News