பல்வேறு பகுதிகளுக்கு 10 புதிய மினி பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர்
பல்வேறு பகுதிகளுக்கு 10 புதிய மினி பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர்;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் மலைகிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 10 புதிய மினி பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து, ஆம்பூர், நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள மலைகிராமங்கள் மற்றும் குக்கிராமங்களுக்கு முறையான பேருந்து வசதிகள் இல்லையென குக்கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இன்று , மலைக்கிராமங்களான காமனூர்தட்டு, பனங்காட்டேரி, ஊட்டல், சொத்தமலை, ஜலகாம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு மினி பேருந்துகளை பொதுபணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார், இதில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்..