திண்டுக்கல்லில் காரில் வந்து ஜவுளி கடையின் மேற்கூரையை உடைத்து பணம், துணி ஆகியவற்றை கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது, கார், ரூ.10 ஆயிரம் பணம் பறிமுதல்

Dindigul;

Update: 2025-12-23 15:50 GMT
திண்டுக்கல், பழனிரோடு முருகபவனம் பகுதியில் சகாயமேரி என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.45 ஆயிரம் பணம், துணிகள் ஆகியவற்றை திருடி சென்றது தொடர்பாக நகர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது இதுகுறித்து நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் சார்பு ஆய்வாளர் வீரபாண்டி நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நிலக்கோட்டையை சேர்ந்த சிவபாண்டி(30) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News