பன்னாட்டு லயன் சங்கங்களில் மண்டலம் 10-ன் மண்டல சந்திப்பு கரூரில் நடைபெற்றது.
பன்னாட்டு லயன் சங்கங்களில் மண்டலம் 10-ன் மண்டல சந்திப்பு கரூரில் நடைபெற்றது.;
பன்னாட்டு லயன் சங்கங்களில் மண்டலம் 10-ன் மண்டல சந்திப்பு கரூரில் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் பன்னாட்டு லயன் சங்கங்களின் மண்டலம் 10-ன் லயன்ஸ் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி இன்று மண்டல தலைவர் லயன் அங்கு. பசுபதி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆளுநர் மணிவண்ணன், பன்னாட்டு ஒப்பிசைவு இயக்குனர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட ஆளுநர் சவரிராஜ், மாவட்ட முதல் துணை ஆளுநர் விஜயலட்சுமி சண்முகவேல், இரண்டாம் துணை ஆளுநர் ஸ்டாலின் உள்ளிட்ட லயன் சங்க நிர்வாகிகள் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள், மாவட்ட தலைவர்கள் மண்டல தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக தலைவர் கருப்பசாமி, செயலாளர் ஜெயபால், பொருளாளர் குமார் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட லயன் சங்கங்களுக்கு மண்டல தலைவர் அங்கு.பசுபதி சிறப்பு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.