கரூரில் 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
கரூரில் 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.;
கரூரில் 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் அடங்கிய கூட்டமைப்பு ஆன போட்டோ- ஜியோ சார்பில் 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவர் பாரதிதாசன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் சந்திரசேகர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்ய வலியுறுத்தியும், கருணை அடிப்படையில் 5% நியமனம் செய்யக்கூடாது என்பதை ரத்து செய்திட வலியுறுத்தியும், தலைமைச் செயலாகம் முதல் அனைத்து துறைகளிலும் உள்ள பல பிரிவு காலிப் பணியிடங்களை நிரப்பி, பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும், அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு பழைய நிலையிலேயே உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் எனவும், மாநில முன்னுரிமை எனக்கூறி வெளியிட்டுள்ள அரசாணை எண் 243 திருத்தம் செய்து மாவட்ட அளவில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.