கரூரில் 10-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூரில் 10-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2026-02-12 09:58 GMT
.கரூரில் 10-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அங்கன்வாடி சங்கத்தின் மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிங்கராயர் உள்ளிட்ட அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதி படி வருவாய் கிராம உதவியாளர்களுக்கு உள்ளது போல சிறப்பு பென்ஷன் ரூ. 6750-ம், அகவிலைப்படியும் வழங்க வேண்டும் சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் 60- ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வலியுறுத்தியும். சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலையில் ரூ.19500-ம், சமையலருக்கும் உதவியாளருக்கு ரூ.1500 காலமுறை ஊதியம். அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Similar News