மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில், 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்லில் மின் தாக்கல் (இ-பைலிங்) முறையைக் கைவிடக் கோரி, மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில், 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில், நீதிமன்றப் பணிகளில், இணைய வழியில் வழக்குப் பதிவு செய்யும் மின்- தாக்கல் (இ-பைலிங்) முறையைக் கைவிடக் கோரி, நாமக்கல் குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞா்கள் உண்ணாவிரத போராட்டம் ஈடுபட்டனா்.;
நாமக்கல், திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், இணைய வழியில் வழக்கு தாக்கல் செய்யும் (இ-பைலிங்) முறையைக் கைவிடக் கோரிக்கை விடுத்தனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டு குழுவின் மாநில துணைத் தலைவர் A. பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில், திரளான வழக்குரைஞா்கள் பங்கேற்று இ-பைலிங் முறைக்கு எதிா்ப்பு தெரிவித்தனர்.இதில், நீதிமன்றத்தில் போதிய இணையதள வசதி, தகுதிவாய்ந்த ஊழியா்களை பணிக்கு அமா்த்தும்வரை இந்த நடைமுறையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினா்.அப்போது செய்தியாளர் இடம் பேசிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கூட்டமைப்பு மாநிலத் துணைத் தலைவர் A. பிரபாகர்,நீதிமன்றத்தில் மின்-தாக்கல் முறையை உடனடியாக உயர்நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என கூறி தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர் சங்கங்கள், சம்மேளனங்கள் போராடி வருகின்றோம். இந்த முறையால் வழக்கறிஞர்களுக்கும் வழக்காடிகளுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, இ ஃபைலிங் முறையில், ரிட்டிகேசன்மீது இடைக்கால தடை உத்தரவு பெற மனு அல்லது வழக்கு சமர்ப்பித்தால், உடனடியாக நிவாரணம் கிடைக்க முடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் வழக்காடிகளுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்காமல் போய்விடுகிறது.குற்றவியல் வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர் வரவில்லை என்றால், மனுதாக்கல் செய்யும்போது, மனு காலதாமதம் ஆவதால், குற்றம் சாட்டப்பட்டவர், நீதிமன்றம் மூலம் பிடியாணை (warrent) பிறப்பிக்கப்பட்டு சிறைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவையெல்லாம் மின் தாக்கல் முறையினால் வரக்கூடிய பாதிப்புகளாக உள்ளன. எனவே e பைலிங் முறையை உடனடியாக உயர்நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்.மேலும், நீதிமன்றத்தில் அடிப்படை வசதிகள் வழக்கறிஞர்கள், வழக்காடிகள் ஆகியோருக்கு ஏற்படுத்தி தரவேண்டும்.வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.இதேபோல, இராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி-வேலூர், குமாரபாளையம் உள்ளிட்ட நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.