கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே திமுக சார்பில் 100 நாள் வேலை திட்டத்தினை பெயர் மாற்றி நிறுத்த துடிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்;
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே திமுக சார்பில் 100 நாள் வேலை திட்டத்தை பெயர் மாற்றி நிறுத்த துடிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு 100 நாள் வேலைத்திட்டத்தின் பெயரை மாற்றி வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்த துடிக்கும் ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கடவூர் வடக்கு ஒன்றியம் மற்றும் கடவூர் மேற்கு,கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஒன்றிய பாஜக மோடி அரசினை கண்டித்தும், அவர்களுக்கு துணை போகும் அதிமுகவினை கண்டித்தும் கண்டன கோஷங்களை முழக்கமிட்டனர் இதில் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் அம்பாள் நந்தகுமார்,கடவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம்,கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர்,கடவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் துரைராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்