முன்னாள் மாணவர்கள் 100 பேர் சுமார் 43 ஆண்டுகளுக்கு பிறகு மகிழ்ச்சியான சந்திப்பு
அரசு மேல்நிலைப் பள்ளியில் 1978 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் வரை படித்த முன்னாள் மாணவர்கள் 100 பேர் சுமார் 43 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்து தங்கள் படித்த பள்ளிக்கு மேசை,நாற்காலிகள் வழங்கி, தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்! கர்நாடக காவல்துறை ஏ.டி.ஜி.பி.ஹரிசேகர்;
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1978 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் வரை படித்த முன்னாள் மாணவர்கள் 100 பேர் சுமார் 43 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்து தங்கள் படித்த பள்ளிக்கு மேசை,நாற்காலிகள் வழங்கி, தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்! கர்நாடக காவல்துறை ஏ.டி.ஜி.பி.ஹரிசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் வரை படித்த, முன்னாள் மாணவர்கள் 100 பேர் சுமார் 43 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்து தங்கள் படித்த பள்ளிக்கு மேசை,நாற்காலிகள் வழங்கி, தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். கர்நாடக காவல்துறை ஏ.டி.ஜி.பி.ஹரிசேகர் உள்ளிட்ட பழைய மாணவர்களை 3 வருடங்களாக தங்களுடன் படித்தவர்களை கண்டுபிடித்து, அவர்களை ஒன்று சேர்த்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை அவர்கள் படித்த பள்ளியான பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேசை,நாற்காலிகள் வழங்கினார்கள். அதன்பிறகு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் ஆசிரியர்கள் 20 பேருக்கு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டது. 43 வருடங்களுக்கு பிறகு அவர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய இந்த நிகழ்ச்சி அவர்களுக்குள் ஆனந்த கண்ணீருடன் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.