சேந்தமங்கலம் பெருமாள் கோவிலில் மகா சகஸ்ர தீப (10,108) அலங்கார விழா!
மாலை 6 மணியளவில் ஸ்ரீ கருடாத்ரி பக்த குழு சார்பில், 19 ம் ஆண்டாக கோவில் வளாகத்தில், 10,108 மகா சகஸ்ர தீப விளக்குகள் ஏற்றப்பட்டு மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. இரவு 7 மணியளவில் நம்பெருமாள் திருக்கோவிலின் உட்பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.;
சேந்தமங்கலத்தில், பழமை வாய்ந்த இலட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கருட பஞ்சமி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு,17ஆம் ஆண்டு கருட பஞ்சமி விழா டிசம்பர் -26 வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது அதை முன்னிட்டு, காலை 8 மணிக்கு ஸ்ரீ கருட யாகத்துடன் பூஜை துவங்கியது, காலை 9 மணியளவில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள், கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது,மாலை 5 மணியளவில் கோவில் வசந்த மண்டபத்தில் லட்சுமி நாராயண பெருமாள் சுவாமி ஸ்ரீனிவாசன்- பத்மாவதி , சிவன் - பார்வதி, ஸ்ரீ குபேரன், பிரம்மா- சரஸ்வதி, வராக மூர்த்தி, வாராஹி, ஸ்ரீ கருடாழ்வார், ஆஞ்சநேயர், நாரதர், யாக கால முனிவர், சுகப்பிரம்மரிஷி , சீனிவாசன் தாயார் வகுளாதேவி, பத்மாவதி (தந்தை/ தாய்) ஆகாஷ ராஜன் - தரணிதேவி போன்ற தெய்வத் அவதாரங்களில் தத்ரூபமாக பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.எம்பெருமான் திவ்ய தம்பதிகளாக காட்சிகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன, *மாலை 6 மணியளவில் ஸ்ரீ கருடாத்ரி பக்த குழு சார்பில், 19 ம் ஆண்டாக கோவில் வளாகத்தில், 10,108 மகா சகஸ்ர தீப விளக்குகள் ஏற்றப்பட்டு மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது. இரவு 7 மணியளவில் நம்பெருமாள் திருக்கோவிலின் உட்பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பின்னர் கோவில் தீபஸ்தம்பத்தில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது, பின் அனைவரும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கட்டளை தார்கள் மற்றும் ஸ்ரீ கருடாத்ரி பக்த குழுவினர் வெகு விமரிசையாக செய்திருந்தனர்.