கர்மயோகி டி.எம். காளியண்ணன் ஐயா அவர்களது 105வது ஆண்டு பிறந்த தினம்.
சேலம் இரயில் நிலையம் அல்லது சேலம் விமான நிலையத்திற்கு கர்மயோகி டி.எம். காளியண்ணன் அய்யாவின் பெயரை வைக்க நாமக்கல் எம்.பி.யிடம் கோரிக்கை;
நாமக்கல் இந்திய அரசியல் நிர்ணய சபையிலும், சுதந்திர இந்தியாவின் முதல் பாராளுமன்றத்திலும், தமிழகத்தின் முதல் சட்டமன்றத்திலும் என மாண்புமிக்க முதல் மூன்று சபைகளிலும் உறுப்பினர் என்ற பெரிமைக்குரியவரும், மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர் என மூத்த அரசியல் தலைவர்களுடன் இணைந்து தேசிய அரசியலில் பயணித்தவரும் நமது நாமக்கல் மண்ணின் பெருமைமிகு மைந்தருமான கர்மயோகி டி.எம். காளியண்ணன் ஐயா* அவர்களது 105வது ஆண்டு பிறந்த தினம் இன்று (ஜனவரி.10) சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு ஐயாவின் பேரனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செய்தித் தொடர்பாளர் மற்றும் மாநில துணைத் தலைவர் (ஓபிசி) பிரிவு டாக்டர் PV செந்தில் அவர்கள் தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர் சித்திக் மற்றும் நகர தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய VS மாதேஸ்வரன் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்று, நாமக்கல் மாநகரம் மோகனூர் -பரமத்தி சாலை சந்திப்பு அருகில் வைக்கப்பட்டிருந்த ஐயாவின் திருவுருவப் படத்திற்கு காலை 10 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்சிறப்புரை ஆற்றிய நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய VS மாதேஸ்வரன் பேசுகையில், அரசியலில் தேசிய மற்றும் மாநில அளவில் பல பதவிகளை வகித்த அய்யா TM காளியண்ணன் , கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர். அய்யாவின் அரசியல் வாழ்க்கையை தற்போதைய அரசியல்வாதிகள் அனைவருமே பின்பற்றி நடப்பார்களேயானால், அவர்களும் தூய்மையான அரசியலை கடைபிடித்து நடப்பதற்கும், மக்கள் சேவையாற்றுவதற்கும் ஏதுவாக இருக்கும் தலைமையுரை ஆற்றிய டாக்டர் PV செந்தில் தனது உரையில், இன்றைய தினம் சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் ஐயா கர்மயோகி டி.எம். காளியண்ணன் அவர்களது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதற்கு ஏற்பாடு செய்த கட்சியின் தமிழக பொறுப்பாளர் திரு.கிரீஷ் ஷோடங்கர், மாநிலத் தலைவர் மற்றும் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை அண்ணார் ஆகியோருக்கு தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்தொடர்ந்து பேசிய டாக்டர் செந்தில், கடந்த 1950ம் ஆண்டு சமுதாயத்தில் நலிவடைந்த, பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்து செயல்பட்டவர் காளியண்ணன் என்றும், பிரெஞ்சு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கீழூர் புரட்சியை ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் வெற்றிகரமாக முடித்து புதுச்சேரி மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க முக்கிய பங்காற்றி தேசத்திற்கு வலிமை சேர்த்தவர் என்றும் கூறினார். மேலும் இன்றைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் ஜில்லா போர்டு தலைவராக செயல்பட்டு, இப்பகுதியில் 2000 பள்ளிகளைத் திறந்து கல்விப் புரட்சியை ஏற்படுத்தியதுடன் சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் கரூர் மாவட்ட மக்கள் காவிரி நீரை தங்களது பாசன வசதிக்கு பயன்படுத்தும் வாழ்வாதார உரிமையை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுத்து இப்பகுதியின் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் என்றும் கூறினார். இவை தவிர, மோகனூர் சர்க்கரை ஆலை, பள்ளிபாளையம் காகித ஆலை, சங்ககிரி சிமெண்ட் தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகளை நிறுவி தொழிற்புரட்சிக்கு அடித்தளமிட்டதுடன், இப்பகுதியின் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியும், இதுமட்டுமின்றி கொல்லிமலைக்கு உலகப் புகழ்பெற்ற சாலை வசதி, ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள், பெண்கள் முன்னேற்றத்திற்கு என பிரத்யேக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என என இவரது சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம் என்று பேசினார். இறுதியாக, நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.சித்திக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் கொங்கு மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கைகளான நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஐயா கர்மயோகி TM காளியண்ணன் அவர்களது பெயரை சூட்ட வேண்டும் என்றும், அன்னாருக்கு அரசு சார்பில் ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும் மேலும் இவ்விரு கோரிக்கைகளையும் மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் ஆவன செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தினார் அதுபோல சேலம் இரயில் நிலையத்திற்கோ அல்லது விமான நிலையத்திற்கோ அய்யாவின் பெயரை சூட்ட வேண்டும் என்று நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய VS மாதேஸ்வரன் அவர்களிடம் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த கொங்கு அமைப்புகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதைக்கேட்டு, பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும், நிச்சயமாக இதுதொடர்பாக எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தில் பேசுகிறேன் என்றும் அது தொடர்பான பணிகளை விரைந்து மேற்கொள்கிறேன் என்றும் உறுதியளித்தார்.இந்நிகழ்ச்சியில், நாமக்கல் கொங்கு நாட்டு வேளாளர் சங்க தலைவர் PK வெங்கடாசலம், சேலம் கொங்கு வேளாளர் நாட்டு கவுண்டர் நலச்சங்க செயற்குழு தலைவர் திரு. R வரதராஜன், முன்னாள் தலைவர்கள் வீரப்பன், வட்டார தலைவர்கள் திரு. ஜெகநாதன், இளங்கோ, சீனிவாசன், முரளி, பெரியசாமி, சந்திரன், நிர்வாகிகள் பொன்முடி, சரவணன், சாந்தி மணி, செந்தில், தாஜ் முகமது, இராணி பெரியசாமி, உள்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஐயாவின் சேவைகளை நினைவு கூர்ந்தனர்.