தீபாவளியில் உயிர் காக்கும் பாலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை..! நாமக்கல் மாவட்டத்தில் தயார் நிலை
தீபாவளியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மருத்துவம், காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுடன் இணைத்து 108 அவசர சேவை தீபாவளி திருநாளன்று பொதுமக்களின் நலனுக்காக 24 மணி நேரமும் முழு தயார் நிலையில் உள்ளது.;
நாடு முழுவதும் அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது எதிர்பாராமல் நடக்கும் பட்டாசு விபத்துகளில் இருந்து, பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒருவேளை எதிர்பாராமல் பட்டாசு விபத்துகள் ஏதேனும் நிகழ்ந்தால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்காக தமிழ்நாடு முழுக்க 108 ஆம்புலன்ஸ் சேவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது தமிழ்நாடு சுகாதாரத்துறை.தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை திட்டத்தின் கீழ் செயல்படும் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை தீபாவளி திருநாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மருத்துவம், காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுடன் இணைத்து 108 அவசர சேவை தீபாவளி திருநாளன்று பொதுமக்களின் நலனுக்காக 24 மணி நேரமும் முழு தயார் நிலையில் உள்ளது. அவசர தேவைக்கேற்ப திடீர் நடவடிக்கை எடுக்கவும் ஹாட்ஸ்பாட் சாலைகளின் தன்மைகளைக் கருத்தில் கொண்டு ஆங்காங்கே 108 ஆம்புலன்ஸ் வானங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் அனைத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் தீயணைக்க பயன்படும் கருவிகள் மீட்பு உபகரணங்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அவசர மருந்து பொருட்கள் தேவையான அளவில் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு மேலும் கூறுகையில்.... நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி திருநாளில் இருபத்தியாறு (26) 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 24 மணி இயக்க நூறு சதவீதம் திட்டமிட்டுள்ளோம்.அடையாளம் காணப்பட்ட ஹாட்ஸ்பாட்டுகளில் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைக்கப்பட உள்ளது.பொதுமக்களுக்கு விரைவாக பதிலளிக்க 108 ஆம்புலன்ஸின் மாநில கட்டுப்பாட்டு அறை ஜிபிஎஸ் அடிப்படையில் இயங்கும்.* பொதுமக்களுக்கு ஆம்புலன்ஸ் விரைவாக கிடைக்க ஜிபிஎஸ் அடிப்படையில் ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்படும்.அனைத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் அனைத்து பொது அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் பிரத்யேகமாக மொபைல் எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் 108 பணியாளர்கள் நோயாளியை ஏற்றிக்கொண்டு கிளம்பும்போது அருகாமையில் உள்ள மருத்துவ பணிகளுக்கு உடனே சிகிச்சை அளிப்பதற்கு எதுவாகவும் மற்றும் அதிக மருத்துவர்கள் தேவைப்படும் பொழுது மருத்துவர்களை வர அழைப்பதற்கும் உதவுகிறது.