கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு வலிவலம் அருள்மிகு இருதய கமல நாத சுவாமி கோயிலில் 108 சங்காபிஷேகம்!!

நாகையில் அருள்மிகு ஸ்ரீ இருதய கமல நாத சுவாமி திருக்கோயிலில், கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.;

Update: 2025-12-16 04:17 GMT

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ இருதய கமல நாத சுவாமி திருக்கோயிலில், கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ஆன்மிக விழாவையொட்டி, சுவாமிக்கு முன்பாக விசேஷ ஹோமம் மற்றும் யாகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிவன் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் நிறைந்த கலசங்கள் மற்றும் வலம்புரி சங்குகளை சிவாச்சாரியார்கள் ஏந்தி, ஆலயத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர், அந்த கலசங்கள் மற்றும் சங்குகளில் உள்ள புனித நீரை கொண்டு சிவன் மற்றும் அம்பாளுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இந்த 108 சங்காபிஷேக விழாவில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News