நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 25,668 பேர் பயன்!
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த எட்டு மாதத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் 25668 பேர் பயன் அடைந்து உள்ளனர்.;
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் இருபத்தியேழு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 20 பேசிக் லைஃப் சப்போர்ட் வாகனங்களும் 6 அட்வான்ஸ் லைஃப் சப்போர்ட் அதி நவீன வசதிகளுடன் கூடிய வாகனங்களும் 1 இங்குபேட்டர் வென்டிலேட்டர் கூடிய பச்சிளம் குழந்தை வாகனங்களும் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் நூற்றுக்கு மேற்பட்ட ஓட்டுனர்களும் மற்றும் மருத்துவ உதவியாளர்களும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.நடப்பாண்டில் (2025) ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 25 ஆயிரத்து 668 பேர் 108 ஆம்புலன்ஸை பயன்படுத்தி சிகிச்சை பெற்று உள்ளனர். ஜனவரி மாதத்தில் 3287 பேரும், பிப்ரவரி மாதத்தில் 2907 பேரும், மார்ச் மாதத்தில் 3290 பேரும், ஏப்ரல் மாதத்தில் 3172 பேரும், மே மாதத்தில் 3282 பேரும், ஜூன் மாதத்தில் 3324 பேரும், ஜூலை மாதத்தில் 3190 பேரும், ஆகஸ்ட் மாதத்தில் 3216 பேர் என மொத்தம் 25668 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.